Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நண்பகல் சுமார் 12.40 மணியளவில் 156 பயணிகளுடன் விமானம் புறப்பட்ட நிலையில், புறப்பட்ட சில நேரத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட கோளாறை பைலட் கவனித்துள்ளார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடனடியாக விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கே மீண்டும் திருப்பி தரையிறக்கினார்.
இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும், தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திடீர் மாற்றத்தால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருந்தவர்கள் நேர தாமதத்தால் கவலை அடைந்துள்ளனர்.
விமான சேவை மீண்டும் எப்போது புறப்படும் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே விமானம் மீண்டும் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சில நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உடனடி நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN