கோடை வெயிலில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காடுகளில் அமைக்கப்படும் தண்ணீர் தொட்டி
புதுக்கோட்டை, 28 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தேடியும் இறை தேடியும் பறவைகளும் வனவிலங்குகளும் காடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. அதே போல, தைலமரக்காடு, முந்திரி காடுகளில் வன விலங
கோடை வெயிலில் வனவிலங்குகளின்  தாகம் தீர்க்க  தண்ணீர் தொட்டி


புதுக்கோட்டை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தேடியும் இறை தேடியும் பறவைகளும் வனவிலங்குகளும் காடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அதே போல, தைலமரக்காடு, முந்திரி காடுகளில் வன விலங்குகள், பறவைகளுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தண்ணீரைத் தேடிச் செல்லும் போது விபத்துகளில் விபத்துகளில் சிக்குகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் தேடிச் செல்லும் மான்கள் சாலைகளைக் கடக்கும் போது விபத்துகளில் சிக்கிப் பல நூறு மான்கள் உயிரிழந்துள்ளன.

அதே போல மயில்களும் உயிரிழந்துள்ளது. தற்போது கோடை தொடங்கியுள்ள நிலையில் வனவிலங்குகளின் உயிரிழப்புகளும் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு பகுதியில் தண்ணீர் தேடிச் சென்ற மான் ஒன்று வாகனம் மோதி உயிரிழந்துள்ளது. அதே இடத்தில் கடந்த ஆண்டு ஒரு மான் விபத்தில் உயிரிழந்தது.

இதனைத் தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து வனவிலங்குகள் பறவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டு தான் உள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில காடுகளில் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கீரமங்கலம் மேற்கு பகுதியில் தண்ணீர் தேடிச் செல்லும் வனவிலங்குகள் ஆபத்தில் சிக்காமல் இருக்க அப்பகுதி நாம் தமிழர் கட்சியினர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து தினசரி தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b