ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) 2026-27-ம் நிதியாண்டு தொடங்கிவிட்டதால், மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் அதாவது வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தினால், மாநகர
5% Discount on Property Tax f


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

2026-27-ம் நிதியாண்டு தொடங்கிவிட்டதால், மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் அதாவது வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தினால், மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவதோடு மட்டுமில்லாமல், அரசு தரும் இந்த தள்ளுபடியை சரியாகப் பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு சதவீத அபராதத் தொகையையும் தவிர்க்கலாம்.

பொதுமக்கள் தங்கள் வரிகளை எளிமையான முறையில் செலுத்த நேரடியாக கணினி வரி வசூல் மையங்கள், https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம், டிஎன் அர்பன் இ-சேவை செயலி மற்றும் யுபிஐ செயலிகள் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

ஏப்ரல் 30-க்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b