ஆரணி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து-விவசாயி மற்றும் சிறுவன் காயம்
திருவண்ணாமலை, 29 ஏப்ரல் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டித் தாங்கல் கிராமத்தில் இன்று நடந்த வெடிகுண்டு விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு விவசாயியாக உள்ள ராஜா தனது நிலத்தில் வேல
Arani City Police Station


திருவண்ணாமலை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டித் தாங்கல் கிராமத்தில் இன்று நடந்த வெடிகுண்டு விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு விவசாயியாக உள்ள ராஜா தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிப்பில் ராஜாவிற்கு கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவருடன் இருந்த அவரது மகன் புவனேஷும் இந்த விபத்தில் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரையும் உடனடியாக அருகிலுள்ளவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் மேலும் சில நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததாக கண்டறியப்பட்டதால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்தில் இவ்வாறு வெடிகுண்டுகள் இருப்பது எப்படி, அவை எதற்காக வைத்திருந்தனர் என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ளன.

காட்டு மிருகங்களை விரட்டுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற வெடிபொருட்கள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN