வாக்கு எண்ணிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
தூத்துக்குடி, 29 ஏப்ரல் (ஹி.ச.) ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026-ன் வாக்கு எண்ணிக்கை, வருகின்ற மே 4-ம் தேதி (04.05.2026) நடைபெற உள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக
Consultation meeting regarding vote counting


தூத்துக்குடி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026-ன் வாக்கு எண்ணிக்கை,

வருகின்ற மே 4-ம் தேதி (04.05.2026) நடைபெற உள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஒருங்கிணைப்பு அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும்வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு இக்கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்கு எண்ணும் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் அலுவலர்களின் கடமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை எவ்விதத் தடங்கலும் இன்றி, நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b