வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில்
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

அவை அனைத்தும், அங்குள்ள 'ஸ்டிராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைகளை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.

மே 4 ஆம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை சிஆர் பி எப் வீரர்கள் தமிழக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர், சென்னை தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b