Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வருகிற மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில்,
மே 2ஆம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2ஆம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் உரிய காரணங்களுக்காக வழங்கப்பட்ட மருத்துவ விடுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, களப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ