மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகிறது- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
புதுடெல்லி, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்குவங்காளத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (29-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும்
கருத்துக்கணிப்பு


புதுடெல்லி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்குவங்காளத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

(29-ந்தேதி) நடைபெற உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வருகிற

4-ந் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் களத்தில் புதிதாக உதித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்? என்பதும் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

விஜய் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க. கூட்டணியை அதிகம் பாதிக்குமா? இல்லை அ.தி.மு.க. அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களிலும், பொது மக்கள் மத்தியிலும் காரசாரமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடியடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன.

இன்று இரவு தங்களது தொலைக்காட்சி சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு வெளியாக இருப்பதாக பல்வேறு ஆங்கில தொலைக்காட்சிகள் நேற்று முன்தினம் முதல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதன் மூலம் இந்த கருத்துக்கணிப்புகள் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதுடன் அரசியல் களத்தில் பரபரப்பும் அதிகரித்து உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P