Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
24.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மின்சார இணைப்பு மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது
குத்தம்பாக்கம் முனையத்தில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகள், விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டப் பேருந்துகள், கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வேலூர், ஓசூர், பெங்களூரு, திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த முனையத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.
தேசிய நெடுஞ்சாலை உடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த முனையம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் விரைவாகச் செல்ல வழிவகை செய்கிறது.
மேலும், பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் இந்த பேருந்து முனையம் உள்ளது.
இந்த பேருந்து முனையம் வரும் ஜுன் மாதம் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b