Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
கடந்த மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது.
தொடந்து தற்போது கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிவை நோக்கி இருக்கிறது.
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஏப்ரல் 29) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P