“ஜாதி-மதமற்றவர் என்பது சான்றிதழ் அல்ல, நடத்தை தான் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கில், ஜாதி மற்றும் மதம் இல்லாதவர் என சான்றிதழ் வழங்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. ஜாதி, மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமை
பார்த்திபன்


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கில், ஜாதி மற்றும் மதம் இல்லாதவர் என சான்றிதழ் வழங்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது.

ஜாதி, மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனக் கூறி,

“ஜாதி-மதமற்றவர்” என சான்று வழங்க கோரி நடிகர் பார்த்திபன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, சோழிங்கநல்லூர் தாசில்தாரர் ஒரு வாரத்தில் சான்று வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, பார்த்திபனுக்கு “ஜாதி, மதம் சாராதவர்” என சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தண்டபாணி முக்கியமாகக் குறிப்பிட்டது:

ஜாதி-மதமற்றவர் என்பதை நிரூபிக்க சான்றிதழ் அவசியமில்லைஇப்படிப்பட்ட சான்றிதழ் வழங்க தாசில்தாரருக்கு அதிகாரமும் இல்லைஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவின் அடிப்படையிலேயே சான்று வழங்கப்பட்டதுமேலும்,

“ஜாதி, மதம் அற்றவர் என்பதை நம் நடத்தை மூலம் தான் காட்ட வேண்டும்; சுய பிரகடனம் அல்லது சான்றிதழ் அவசியமில்லை” என நீதிபதி வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பார்த்திபன்,

“நல்லவர் என்று சொல்லுவதற்கே கூட இப்போது சான்றிதழ் தேவைப்படுகிறது” என கூறினார்.

இறுதியாக, பார்த்திபனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பதிவு செய்து கொண்டு, வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.

Hindusthan Samachar / GOKILA arumugam