Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 29 ஏப்ரல் (ஹி.ச.)
இன்றைய டிஜிட்டல் காலத்தில் மாணவர்கள் மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களின் உடல் மற்றும் மனநலன் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பாக, கண் பார்வை குறைபாடு, ஞாபக சக்தி குறைவு, கேள்வித்திறன் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியும் பாதிக்கப்படுவதுடன், விளையாட்டுகளில் ஆர்வம் குறைகிறது.
கன்னட பத்திரிகைகளை மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தது.
அந்த நடைமுறையை பின்பற்றி தற்போது கர்நாடக அரசும் இதே போன்ற உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதற்கு தீர்வாக, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் பத்திரிகை வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக்கொண்ட கல்வித்துறை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், உறைவிட பள்ளிகள், விடுதிகள் மற்றும் சிறார் காப்பகங்கள் அனைத்திலும் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையை கல்வித்துறை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.
பத்திரிகை வாசிப்பதன் மூலம் மாணவர்களின் சொற்களஞ்சியம் அதிகரிப்பதுடன், எழுத்துத் திறன் மற்றும் கேள்வித்திறன் மேம்படும் என்றும், சுற்றியுள்ள உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் திறனும் வளருமென தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால், மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் பாதுகாக்கப்படுவதுடன் வாசிப்பு பழக்கமும் அதிகரிக்கும் என கல்வி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA