Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 29 ஏப்ரல் (ஹி.ச.)
கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
முதல்வர் கொடைக்கானலிலிருந்து கிளம்புவதை முன்னிட்டு, காலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் சாலையோரங்களில் திரண்டு நின்று அவரை காணக் காத்திருந்தனர்.
அப்போது திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய முதல்வர், மக்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒரு சிறுமி, “சி.எம் சார் நீங்கதான் சார் கெத்து, தவேக வெத்து” என்று உற்சாகமாக கூறினார்.
இதை கேட்ட முதல்வர் லேசான புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு புறப்பட்டார்.
இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
மேலும், முதல்வர் மதுரைக்கு சென்று அங்கிருந்து காலை சுமார் 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam