Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 29 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கட்டத்தில் மொத்தம் 142 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை பதிவு செய்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, எந்தவித பெரிய தடங்கல்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நகரங்களை ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீதமுள்ள நேரத்திலும் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA