வேப்பனப்பள்ளி அருகே சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு- கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி, 29 ஏப்ரல் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் கல்லூரி மாணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே கத்திரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூரியநாராயணன் என்பவரி
கைது


கிருஷ்ணகிரி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் கல்லூரி மாணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேப்பனப்பள்ளி அருகே கத்திரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூரியநாராயணன் என்பவரின் மகன் ஹரிஹரன் (14), தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரின் நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த பகவதி (18), பொறியியல் கல்லூரி மாணவர்.

பகவதி தனது நண்பர்களான அஜித் (18), மோனிஷ் (19) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 12ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த ஹரிஹரனை, “உன் தந்தை வெளியூரில் இருந்து அழைத்துள்ளார்” என்று கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, சூளகிரி அருகே கடத்தியுள்ளனர்.

பின்னர் ஹரிஹரனின் தந்தைக்கு தொடர்பு கொண்டு, “மகனை விடுவிக்க ₹5 லட்சம் தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஹரிஹரனின் தந்தை வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து கடத்தியவர்களை எச்சரித்ததால், பயந்துபோன அவர்கள் சிறுவனை அங்கேயே விட்டு தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து போலீசார் ஹரிஹரனை பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பகவதி, அஜித், மோனிஷ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணத்திற்காக சிறுவன் கடத்தப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam