கொடுக்காய்புளி மரம் - 20 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது
தமிழ்நாடு, 29 ஏப்ரல் (ஹி.ச.) கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே நம் நினைவிற்கு வரும். சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம்
w


தமிழ்நாடு, 29 ஏப்ரல் (ஹி.ச.)

கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே நம் நினைவிற்கு வரும்.

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் உகா மரம் என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் இதற்கு பெயர் உண்டு.கொடிக்காய் மரமானது 30-100 செமீ விட்டமுடைய சாம்பல் வடிவ தண்டினைக் கொண்டுள்ளது.

5-20 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது.

கொடிக்காய் மரமானது எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினைக் கொண்டுள்ளது.

கொடிக்காய் மரத்தின் பூக்கள் சிறிதாக கோளவடிவில் வெள்ளை-பச்சை கலந்த நிறத்தில் காணப்படுகின்றன.

கொடிக்காயானது 1 முதல் 3 வரை உள்ள வட்டங்களாக சுருள் வடிவில் காணப்படும்.

கொடுக்காய்ப்புளியானது இனிப்பு அல்லது துவர்ப்பு சுவையினையோ அல்லது இரண்டும் கலந்த சுவையினையோ கொண்டிருக்கும்.

கொடிக்காயினுள் பச்சைநிற விதைகளும், விதையினைச் சுற்றிலும் வெள்ளைநிற சதைப்பகுதியும் காணப்படுகின்றன.

இக்காயானது பழுக்கும்போது விதைகள் கருப்பு நிறத்திற்கு மாறி சதைப்பகுதி பருத்து வெளியே தெரியும்படி காணப்படுகிறது.

பாசன வாய்க்கால் ஓரங்களில் செழித்து வளரக்கூடிய கொடுக்காய்ப்புளி மரங்களுக்கென்று தனியாக பாசன வசதி தேவையில்லை.

இந்த மரங்கள் குட்டையாகவும், முட்களுடனும் இருப்பதால் வேலிக்காகவும் கிராமங்களில் நடுவதுண்டு.

Hindusthan Samachar / Durai.J