மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்பட தயாராகிறார் – 18ம் படி கருப்பணசுவாமி சன்னதி மலர்களால் மிளிர்கிறது
மதுரை, 29 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை சித்திரை திருவிழாயின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் இன்று மாலை மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பட உள்ளார். இதனை முன்னிட்டு, 18ம் படி கருப்பணசுவாமி சன்னதி பகுதி கண்கவர் அலங்காரத்தில் ஒளிர்கிறது. டன் கணக்கில் வண்ண மலர்
கள்ளழகர்


மதுரை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை சித்திரை திருவிழாயின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் இன்று மாலை மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பட உள்ளார்.

இதனை முன்னிட்டு, 18ம் படி கருப்பணசுவாமி சன்னதி பகுதி கண்கவர் அலங்காரத்தில் ஒளிர்கிறது. டன் கணக்கில் வண்ண மலர்களால் சன்னதி கதவுகள், பக்கவாடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இரவு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

பழமையான மரபுப்படி, திருக்கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர், காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசுவாமி சன்னதிக்கு வந்து “போயிட்டு வரட்டுமா” என உத்தரவு பெற்றுக் கொண்ட பிறகே மதுரையை நோக்கி பயணிக்கிறார். இந்த ஆன்மிக நிகழ்வை காண பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில், காக்கும் தெய்வமான 18ம் படியானின் அருளாசியை பெற்று, கள்ளழகர் இன்று மக்களோடு மதுரையை நோக்கி புறப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam