ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்த விவகாரம்- 59 வயது பெண்மணிக்கு காவல்துறை நோட்டீஸ்
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச) பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், 59 வயது பெண்மணிக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு 35 BNS சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வ
James


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச)

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், 59 வயது பெண்மணிக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு 35 BNS சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், எந்தவித உள் நோக்கத்தோடும் கார் கண்ணாடி உடைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மேலான விசாரணைக்கு பிறகு வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வீட்டின் முன்பு கார் நிறுத்தப்பட்டதால் வெளியே செல்ல முடியாமல் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண்மணி கார் கண்ணாடியை உடைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ