கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா வாகனங்கள் பயணிக்க இன்று முதல் முழுவதுமாக தடை
நீலகிரி, 29 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றாக கல்லட்டி மலை பாதை உள்ளது. கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர இந்த சாலை மிகவும் எளிதாக இருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்
Kallatti Hills


நீலகிரி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றாக கல்லட்டி மலை பாதை உள்ளது. கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர இந்த சாலை மிகவும் எளிதாக இருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் மசனகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களும் நீலகிரி மாவட்டம் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் அபாயகரமான சாலை என்ற நிலையில் இந்த மலை பாதையில் அதிக விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.

ஆனால் நீலகிரி மாவட்ட வாகனங்கள் இருபுறமும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மசினகுடியிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக உதவிக்கு வர அனைத்து வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கல்லட்டி மலை பாதை வழியாக உதகைக்கு வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும், கல்லட்டி மலை பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என தொடரபட்ட வழக்கில் மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இன்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் தெப்பக்காடு பகுதியிலேயே கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் அனுப்பி வருகின்றனர்.

மேலும் மசினகுடியில் இருந்து உதகைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும் சீகூர் பாலம் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கபடுகிறது. இதனால் மசினகுடி பகுதியில் உள்ள சுற்றுலா தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN