13 வருடங்களுக்குப் பிறகு பகையை தீர்த்துக் கொண்ட மகன் - கோவில் திருவிழாவில் படுகொலை
தென்காசி, 29 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான காளி என்ற 67 வயது நபரை இளைஞர் ஒருவர் கோவில் திருவிழாவில் வைத்து வெட்டி படுகொலை செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக
Puliyarai Police Station


தென்காசி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான காளி என்ற 67 வயது நபரை இளைஞர் ஒருவர் கோவில் திருவிழாவில் வைத்து வெட்டி படுகொலை செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற புளியரை போலீசார் காளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த கொலையானது முன்பகை காரணமாக நடைபெற்றதாகவும், குறிப்பாக தற்போது கொலை செய்யப்பட்ட காளி, 13 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகையா என்பவரை வெட்டி படுகொலை செய்த நிலையில், அதற்கு பலி தீர்க்கும் விதமாக முருகையாவின் மகனும், அரசு பள்ளியில் ஊழியராக பணியாற்றி அருண்குமார் (வயது 34) என்பவர், காளியை வெட்டி படுகொலை செய்ததும் தெரியவந்த நிலையில், தற்போது அருண்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குறிப்பாக, கோவில் திருவிழாவில் முன்பகை காரணமாக தொழிலாளி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN