Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழகில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு நீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பை அமல்படுத்தவும், நீர் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீர் மேலாண்மை மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, இந்த இரண்டு அமைப்புகளில் அவ்வப்போது கூடி இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் இன்று
(29-04-26) டெல்லியில் நடைபெற்றது.
ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.
அதே போல் கர்நாடகா அரசு சார்பாக அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரை உறுதி செய்வது குறித்தும், தமிழ்நாட்டிற்கான மே மாதாந்திர நீர் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு மே மாதம் கணக்கீட்டின்படி காவிரியில் 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு கோரிக்கை வைத்தது.
அந்த கோரிக்கையை ஏற்று 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b