Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோமான் நகரில் 'Space Zone India' என்கின்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2020- ஆம் துவங்கப்பட்டது.
இளம் விஞ்ஞானியாக திகழும் ஆனந்த் மேகலிங்கம் என்பவரால் துவங்கப்பட்ட. இந்த நிறுவனம் இதுவரை 26,000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதுடன், 46 பேருக்கு பணி வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விண்வெளி தொழில்நுட்ப பயிலரங்கில் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
நான்கு வாரம் நடந்த பயிலரங்கில் நாசா அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், ஸ்பேஸ் போர்ஸ் எனும் தனிப்பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
தாயகம் திரும்பிய விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியாவைவிட அமெரிக்காவில் அதிக அளவு தொழில்நுட்பம் வாய்ந்த பொருட்களைப் பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கே பயிற்சி எடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதைப் பற்றி எனது குழுவினருடன் ஆலோசித்து புதிய முயற்சியில் ஈடுபட்டு சாதனை படைக்கவுள்ளோம்.
வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி சென்னையில் ஒரே சமயத்தில் இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைக்க உள்ளேன்.
நம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது செயற்கைக்கோள் தான். ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதாக இருந்தாலும், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற தளங்களில் உணவுகளை வாங்குவதற்கும், நம் அன்றாட உளவியல் வாழ்க்கையில் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளின் பங்கு மிகவும் முக்கியதாகக் கருதப்படுகிறது. அதனால் விண்வெளி ஆராய்ச்சி பற்றியும் , செயற்கைக்கோள் பற்றியும் நிச்சயமாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,என்று அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / ANANDHAN