சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை , 29 ஏப்ரல் (ஹி.ச.) சிவன் ஆலயங்களில் புராண கால பழைமை வாய்ந்ததும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி (மே 1 ) கிரிவலம் செல்ல ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி ஆகிய நாட்களில்
Special Train Between Tiruvannamalai and Villupuram


சென்னை , 29 ஏப்ரல் (ஹி.ச.)

சிவன் ஆலயங்களில் புராண கால பழைமை வாய்ந்ததும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி (மே 1 ) கிரிவலம் செல்ல ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி ஆகிய நாட்களில் அதிக பக்தர்கள் வருவார்கள்.

இதனால் விழுப்புரம் திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

விழுப்புரத்தில் இருந்து வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் மதியம் 1.45 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.

இதேபோல், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பலம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b