தேனிசை செல்லப்பா மறைவு - சீமான் நேரில் அஞ்சலி
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழீழ உணர்வுப் பாடல்களால் அறியப்பட்ட பாடகர் தேனிசை செல்லப்பா மறைவுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக காலமான தேனிசை செல்லப்பாவின் மறைவு, தமிழ்
சீமான்


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழீழ உணர்வுப் பாடல்களால் அறியப்பட்ட பாடகர் தேனிசை செல்லப்பா மறைவுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவு காரணமாக காலமான தேனிசை செல்லப்பாவின் மறைவு, தமிழ் சமூகத்திலும் தேசிய உணர்வாளர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய சீமான், செல்லப்பாவின் பாடல்கள் தமிழர் உரிமை உணர்வை எழுப்பியதாகக் குறிப்பிட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தேனிசை செல்லப்பாவை “புரட்சிக் குரல்” எனப் பாராட்டி, அவரது பாடல்கள் இனி தலைமுறைகளுக்கும் ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் பாடல்களில் தனித்துவமான குரலாக திகழ்ந்த தேனிசை செல்லப்பா, பல ஆண்டுகளாக சமூக மற்றும் அரசியல் மேடைகளில் தனது குரலை பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam