Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தெற்கு மேடு பகுதியில் பழிக்குப்பழி கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு பகை காரணமாக காளி என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தண்டனை அனுபவித்த காளி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகையாவின் மகனான அருண்
(அரசு பள்ளி ஆசிரியர்), தந்தையின் கொலையால் காளி மீது பழி வைத்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை தெற்கு மேடு பகுதியில் சப்பாணி மாடன் ஆலய கொடை விழா நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்ட காளியை அருண் அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காளியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்த அருண் செங்கோட்டை மேலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பழிக்குப்பழி கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam