Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை இன்று வழங்க உள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பு மாநில அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ