Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டெல்லியில் இன்று நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் பேசப்படுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைந்த பிறகே எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியாக இருக்கும் சூழலில், தற்போதைய கூட்டம் அந்த மாநிலத்திற்கு சாதகமான நிலையை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது என்றும் தினகரன் கூறியுள்ளார்.
எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைத்து, புதிய அரசுகள் பதவியேற்ற பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ