Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 2ம் தேதி வரை சென்னைத மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 548 பேருந்துகளும், 1ம் தேதி 565 பேருந்துகளும் மற்றும் 2ம் தேதி 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து நாளை 186 பேருந்துகளும் 1ம் தேதி 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாறிலிருந்து நாளை 55 பேருந்துகளும் 1ம் தேதி 50 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் 2ம் தேதி வரை 11823 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 1ம் தேதி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b