தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் ஒரு பகுதியாக, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் விழிப்புணர்வை அத
தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் ஒரு பகுதியாக, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிப்பது, தகவல் அறிந்த மற்றும் தார்மீக அடிப்படையிலான வாக்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையே முழுமையான தேர்தல் பங்கேற்பை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சட்டமன்ற தொகுதிகள் அளவில் இந்த முன்னெடுப்புகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

SVEEP செயல்பாடுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்:

பெரிய அளவிலான நிகழ்ச்சிகள்: 1,486

சிறிய அளவிலான நிகழ்ச்சிகள்: 22,130

பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளர் உறுதிமொழி பிரசாரங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் எழுத்தறிவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டமும் அதன் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளை திறம்பட பரப்பி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b