Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கள்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த
நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு வானதி சீனிவாசன், தஞ்சையில் கருப்பு முருகானந்தம், அவிநாசியில் எல். முருகன், நாகர்கோவிலில் எம். காந்தி, விளவங்கோட்டில் விஜயதரணி, சாத்தூரில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:
ஆவடி - M. ராஜசிம்ம மகேந்திரா
மயிலாப்பூர் - Dr. தமிழிசை சௌந்தரராஜன்
தளி - Dr. நாகேஷ் குமார்
திருவண்ணாமலை - C. ஏழுமலை
ராசிபுரம் (SC) - Dr. S.D. பிரேம்குமார்
மொடக்குறிச்சி - கீர்த்திகா சிவகுமார்
உதகமண்டலம் - போஜராஜன்
அவினாசி (SC) - Dr. L. முருகன்
திருப்பூர் (தெற்கு) - S. தங்கராஜ்
கோயம்புத்தூர் (வடக்கு) - வானதி சீனிவாசன்
திருவாரூர் - கோவி சந்துரு
தஞ்சாவூர் - M. முருகானந்தம்
கந்தர்வகோட்டை (SC) - C. உதயகுமார்
புதுக்கோட்டை - N. ராமச்சந்திரன்
அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
திருப்பத்தூர் - K.C. திருமாறன்
மானாமதுரை (SC) - பொன். V. பாலகணபதி
மதுரை தெற்கு - பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன்
சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம் - GBS K. நாகேந்திரன்
திருச்செந்தூர் - KRM ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர் (SC) - அனந்தன் அய்யாசாமி
ராதாபுரம் - S.P. பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் - M.R. காந்தி
குளச்சல் - T. சிவகுமார்
பத்மநாபபுரம் - P. ரமேஷ்
விளவங்கோடு - S. விஜயதரணி
Hindusthan Samachar / vidya.b