தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம் - வானதி சீனிவாசன்
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்
தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம் - வானதி சீனிவாசன்


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, மாண்புமிகு பிரதமர் திரு. மோடி , மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் திரு. நிதின் நபின், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான திரு. பியுஷ் கோயல், பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்ட போதும் கோவை தெற்கு தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதுபோல இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெல்வோம்.

திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b