சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதிக்காத அரசை மக்கள் அகற்றுவார்கள் - பீகார் அமைச்சர் ராம் கிருபால் யாதவ்
பாட்னா, 03 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி கிராம மக்களால் மூன்று பெண்கள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் பணயக்கைதிகளாக பிடிக்கபட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞா
சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதிக்காத அரசை மக்கள் அகற்றுவார்கள் - மால்டா சம்பவம் குறித்து பீகார் அமைச்சர் ராம் கிருபால் யாதவ்


பாட்னா, 03 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி கிராம மக்களால் மூன்று பெண்கள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் பணயக்கைதிகளாக பிடிக்கபட்ட சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று தேசியப் புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் குமார் விசாரணையை என்ஐஏ-விற்கு மாற்றினார். என்ஐஏ குழுவினர் இன்று மேற்கு வங்கத்திற்கு வருகை தர உள்ளனர்.

மால்டா பணயக்கைதிகள் விவகாரம் குறித்து, பீகார் அமைச்சர் ராம் கிருபால் யாதவ் இன்று மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்தார்.

சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதிக்காத அரசை வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் அகற்றுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசிய யாதவ்,

ஒரு நீதித்துறை அதிகாரிக்கு எதிராக வன்முறை நிகழ்ந்த மால்டா வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டையும், அதிகாரிகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

தற்போது மாநிலத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் தாமதமாக உள்ளன. ஆனால் இந்த நிலை நீண்டகாலம் நீடிக்காது. வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தங்களுடைய தீர்ப்பை வழங்குவார்கள்.

சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதிக்காத அரசு நிச்சயம் அகற்றப்படும். அமைச்சர்கள் உட்பட பல உள்ளூர் தலைவர்கள் இந்த சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்று கூறி, தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மேற்கு வங்கத்தை காட்டு ராஜ்ஜியம் எனவும், குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM