தஞ்சை சட்டமன்ற தொகுதி  பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்பு
தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.) தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ராக்ஸ் விடுதியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜக மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்க
ப


தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ராக்ஸ் விடுதியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜக மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஸ் தலைமை தாங்கினார்.

சட்டமன்றத் தொகுதி இணை அமைப்பாளரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான உமாபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலாளரும்,திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளரும் கருப்பு. முருகானந்தம் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு போன்ற பணிகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் தஞ்சாவூர் சட்டமன்ற மேலிடப் பார்வையாளரும் கர்நாடக மாநில ஊடகப் பொறுப்பாளருமான கருணார் கார்ஸ்லே கலந்து கொண்டு கட்சியினர் தேர்தலில் வேட்பாளர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்கினார்.

Hindusthan Samachar / Durai.J