Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி ச)
சென்னை அயனாவரம்
சோலையம்மன் தெருவில் வசித்து வரும் பாபு (57) என்பவரது வீட்டில், நேற்று நள்ளிரவு யுவராஜ் (21) என்ற இளைஞர் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இருவரும், சென்னை அயனாவரத்தில் குடிசை அமைத்து தங்கி மாநகராட்சி கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதன்படி, 100 மில்லி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்து, பாபுவின் குடிசை வீட்டின் மீது யுவராஜ் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சம்பவத்திற்குப் பிறகு தப்பிச்சென்ற யுவராஜை பிடிக்க அயனாவரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ