கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு (CCB) ஃபோர்ஜரி பிரிவு அலுவலகத்தில் காலை சுமார் 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக
cop


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு (CCB) ஃபோர்ஜரி பிரிவு அலுவலகத்தில் காலை சுமார் 7.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருந்த காவலர்கள் தீயை கவனித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள் மற்றும் நாற்காலிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

முதற்கட்ட விசாரணையில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வேப்பேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ