கோவை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் – உடனடி நடவடிக்கை கோரி அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளது, எனவே தேர்தல் காலம் என்பதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதி
BJP Annamalai


Hw


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளது, எனவே தேர்தல் காலம் என்பதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் மற்றும் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனத்துறையினரும், உள்ளூர் கிராம மக்களும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு வாரமாகியும் அந்த சிறுத்தை இன்னும் பிடிக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் காலம் என்பதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வனத்துறை உடனடியாக விஞ்ஞான ரீதியிலான தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு வலை அமைத்து, சிறுத்தையை விரைவில் பிடித்து மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ