Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்-இல் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் ரெயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், பணிகள் காரணமாக தற்காலிகமாக 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டிருந்தன.
இதனால் ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு, பயணிகள் சிரமம் அனுபவித்தனர்.
தற்போது சீரமைப்பு பணிகள் திட்டமிட்டதை விட முன்பே நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் மீண்டும் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக அமலில் இருந்த தற்காலிக கால அட்டவணை ரத்து செய்யப்பட்டு, பழைய வழக்கமான அட்டவணைப்படி ரெயில் சேவைகள் இயங்குகின்றன.
இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணம் செய்யும் தினசரி பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam