Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சி வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் தலைமை தாங்கி கலை நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்த குடிமக்களாகிய நாம் மதம் இனம் சாதி சமூகம் மொழி அல்லது பிற காரணங்களால் பாதிக்கப்படாமல் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று உறுதியளிக்கிறோம் என்று உறுதிமொழி வாசித்தார்.
மேலும்85 வயதானவர்கள் மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளில் சென்று வாக்குகள்
சேகரிபார்கள்.
எனவே வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி தேர்தல் அதிகாரிகள் தாசில்தார் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார், ராஜா,
இளநிலை உதவியாளர் கென்னடி, கிராம நிர்வாக அலுவலர்கள், ஜெயபிரகாஷ், கார்த்திக், உமாதேவி, அருள் ராணி, கிராம உதவியாளர்கள் ஜெயக்குமார், சண்முகம், கண்ணன், சுமதி, புஷ்பம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பது எங்கள் உரிமை வாக்களிப்பது எங்கள் கடமை எங்கள் வாக்கு விற்பனைக் கு அல்ல என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திய படி நின்றனர்.
மதுரை கலைகுழுவைச் சேர்ந்தவர்கள் தாரை தப்பட்டை முழங்க வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பாடல் பாடி நடனம் ஆடினர்.
இந்த கலை நிகழ்ச்சியை பஸ் பயணிகள் வியாபாரிகள் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Hindusthan Samachar / Durai.J