Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 ஏப்ரல் (ஹி.ச.)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களை அடையாளம் காண உதவும் வகையில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை வேட்பாளர்களின் பெயர் மற்றும் கட்சி சின்னம் மட்டும் இடம்பெற்றிருந்த நிலையில், இனிமேல் வேட்பாளர் வரிசை சீட்டில் அவர்களின் வண்ணப் புகைப்படங்களும் சேர்க்கப்படும்.
இந்த புதிய நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் கல்வியறிவு குறைந்தவர்கள், வேட்பாளர்களை எளிதில் அடையாளம் கண்டு சரியானவருக்கு வாக்களிக்க முடியும்.
மேலும், வாக்குப்பதிவின் போது ஏற்படும் குழப்பங்களை குறைத்து, தேர்தல் செயல்முறையை மேலும் தெளிவாகவும் எளிமையாகவும் மாற்ற இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வசதி வரவிருக்கும் தேர்தல்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam