தந்தை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு...
விழுப்புரம், 03 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ (16), 11ஆம் வகுப்பு மாணவி. இவர் திண்டிவனம் அருகே பெலாகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
பலி


விழுப்புரம், 03 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ (16), 11ஆம் வகுப்பு மாணவி. இவர் திண்டிவனம் அருகே பெலாகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று, மாணவி சரியாக படிக்கவில்லை என அவரது தந்தை சக்திவேல் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ, வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam