875 சவரன் நகை திருட்டு வழக்கில் சகோதரி, சகோதரர்கள் சிறை
தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக உள்ள ஏ.கே.எஸ். விஜயன் அவர்களின் சகோதரியின் வீட்டில் இருந்து 875 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்
கைது


தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக உள்ள ஏ.கே.எஸ். விஜயன் அவர்களின் சகோதரியின் வீட்டில் இருந்து 875 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வெளிநபர்கள் அல்லாமல் குடும்பத்தினரே இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக

சாதிக் பாத்ஷா, மொய்தீன், ஆயிஷா பர்வீன் மற்றும் பாத்திமா ரசூல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருடப்பட்ட நகைகள் முழுவதும் மீட்கப்பட்டன. பின்னர் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அனைவருக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

உறவினர்களுக்குள்ளேயே நடந்த இந்த பெரிய அளவிலான நகை திருட்டு சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam