Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.
விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,புதுச்சேரில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெறும் இந்த நாட்களில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 2 உத்தரவுகளில்,
புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வருகிற 9-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்று சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b