Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 03 ஏப்ரல் (ஹி.ச)
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் சேர்ந்து பயில தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் ஆண்/பெண் இருபாலரும் தற்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராகவோ அல்லது 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
01.01.2027 அன்று விண்ணப்பதாரர் 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். (அதாவது, 02.01.2014 முதல் 01.07.2015-க்குள் பிறந்திருக்க வேண்டும்).
ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களில் தகுதித் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு வரும் 07.06.2026 அன்று தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய வினாத்தாள் தொகுப்பைப் பெற விரும்புவோர்:
www.rimc.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு ரூ. 600/-; பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு (SC/ST) ரூ. 555/-.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டைப் பிரதிகளுடன்) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC),
பூங்கா நகர், சென்னை - 600003.
முக்கியத் தேதி: விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 05.04.2026 மாலை 5.45 மணி வரை.
தகுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b