Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்த கிருத்திக(41) நேற்று மாலை வடபழனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
அப்போது வடபழனி லக்ஷ்மன் சுருதி சிக்னல் அருகே காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று கிருத்திகாவின் கழுத்தில் பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்த பொது மக்களால் மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பின் நெசப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ