நத்தம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செல்வகுமாரை மாற்ற கோரி இந்திய தேசிய லீக் கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரிடம் கோரிக்கை
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச) இந்திய தேசிய லீக் தமிழ்நாடு மாநில தலைவர் அல்ஹாஜ் M. பஷீர் அஹமது முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஏற்கனவே திமுக கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவை தெர
Basheer


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச)

இந்திய தேசிய லீக் தமிழ்நாடு மாநில தலைவர் அல்ஹாஜ் M. பஷீர் அஹமது முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஏற்கனவே திமுக கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இன்று மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து உள்ளோம்.

திண்டுக்கல் நந்தம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செல்வகுமாரை ஆர் எஸ் எஸ் சின் முகமாக இருப்பதால் வேட்பாளரை மாற்ற கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு சில நெருடல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்

மேலும் மீண்டும் திமுக அரசு அமைந்ததும் காவிரி குண்டாறு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ