பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து அங்கு கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்ப
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து அங்கு கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுவை செல்கிறார்.

அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர் இன்று இரவு சென்னை நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

நாளை(ஏப்ரல் 4) சென்னையில் பா.ஜ.க நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.

இதன்பின்னர் அவர் புதுடெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b