பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்!
சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக உள்ள பிரகாசம், சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ப
பூந்தமல்லி வேட்பாளர்


சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக உள்ள பிரகாசம், சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து கைது செய்யப்படுவேன் என்ற அச்சத்தில் பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிரகாசத்திற்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தேர்தல் நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam