கர்ப்பிணி மனைவி, இரண்டு மகள்கள் ஆகியோரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்து நாடகமாடிய கொடூரன் கைது
திருப்பதி, 03 ஏப்ரல் (ஹி.ச) தெலங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் அய்னோலு மண்டலத்தை சேர்ந்த அசாருதீன் (26), அவரது மனைவி பர்கத் (24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு உமேரா (8), ஆயிஷா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண
கைது


திருப்பதி, 03 ஏப்ரல் (ஹி.ச)

தெலங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் அய்னோலு மண்டலத்தை சேர்ந்த அசாருதீன் (26), அவரது மனைவி பர்கத் (24) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்களுக்கு உமேரா (8), ஆயிஷா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், அடுத்து ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்த அசாருதீன், கர்ப்பமாக இருந்த மனைவியை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.

அதில் மீண்டும் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று தெரியவந்தது. இதனால் கர்ப்பத்தை கலைக்கும்படி மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பர்கத் அதற்கு மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், பின்னர் சமாதானம் பேசி அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்தார். அதே சமயம், மனைவியை கொலை செய்து இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என கூறி மனைவி மற்றும் மகள்களை வெளியே அழைத்துச் சென்ற அசாருதீன், பின்னர் குடும்பத்துக்குச் சொந்தமான நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலில் சிசிடிவி கேமரா மற்றும் மின் இணைப்புகளை துண்டித்துள்ளார்.

பின்னர் மனைவியை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இதை பார்த்து வந்த இரண்டு மகள்களையும் தண்ணீரில் தள்ளி மூழ்கடித்து கொன்றுள்ளார்.

பின்னர் சம்பவத்தை விபத்து போல காட்ட முயன்ற அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசாருதீன் மீது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் கருவில் இருந்த குழந்தை என நான்கு பேரைக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam