Enter your Email Address to subscribe to our newsletters

சோனிபட் , 03 ஏப்ரல் (ஹி.ச.)
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்ட்லி–மனேசர்–பால்வால் விரைவுச்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் குஷ்பாஸ் சிங் ஜட்டானா மற்றும் அவரது ஓட்டுநர் உயிரிழந்தனர்.
இது குறித்து குண்ட்லி காவல் நிலைய ஆய்வாளர் சேத்தி மாலிக் தெரிவித்ததாவது,
இன்று காலை சுமார் 5.10 மணியளவில், ஜட்டானா, அவரது ஓட்டுநர் மற்றும் ஒரு பாதுகாவலர் ஆகியோரை ஏற்றிச் சென்ற ‘டிஃபெண்டர்’ வகை வாகனம், அடையாளம் தெரியாத லாரியுடன் மோதியதாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தது.
வாகனத்தின் டயர் பஞ்சரானதால், அதை மாற்றிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து அதிவேகமாக வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் ஜட்டானா மற்றும் அவரது ஓட்டுநர் பர்மிந்தர் உயிரிழந்தனர். பாதுகாவலர் மற்றும் டயர் மாற்ற உதவிய மற்றொருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜட்டானா டெல்லியிலிருந்து பஞ்சாபில் உள்ள தனது சொந்த ஊரான பதிண்டாவிற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜட்டானாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. உறவினர்கள் வந்தபின் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும்.
மேலும், விபத்துக்கு காரணமான லாரியைத் தேடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பதிவு எண் கண்டறியப்பட்டுள்ளது.
ஓட்டுநரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM