சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகே
ஏழூர் பல்லக்கு


தஞ்சாவூர், 03 ஏப்ரல் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழாவின் கொடியேற்றம் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு விதமான வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும், கோபுர தரிசனமும் செய்தனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை சுற்றிப் பகுதிகளான ஏழு கிராமங்களுக்கு வீதியுலா சென்று, நாளை மாலை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட காவல் காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam